Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் புதுப்படம் மே 2 தொடங்குகிறது

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (19:42 IST)
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதுப்படம் மே 2ஆம் தேதி மைசூரில் தொடங்குகிறது.
கோச்சடையான் படத்துக்குப் பிறகு ரஜினி படங்களில் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் புதுப்பட அறிவிப்பை வெளியிட்டு அவரது ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்தப் படம் கோச்சடையான் போன்று அனிமேஷன் கிடையாது. ரசிகர்கள் விரும்பும் நிஜமான ரஜியை நீங்கள் இதில் பார்க்கலாம் என ரஜினியுடன் நடிக்கயிருக்கும் சோனாக்‌சி சின்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சோனாக்‌சியுடன் அனுஷ்காவும் நடிக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசை.
 
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. லிங்கா உள்பட பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. லிங்கா என்பது சிவனை குறிக்கும் பெயர். ஐஸ்வர்யா தனுஷின் இளைய மகனின் பெயரும் லிங்காதான்.
 
மே 2 படத்தின் பெயரை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்திய கியாரா அத்வானி!

சூர்யா கார்த்திக் சுப்பராஜ் படத்தின் கதாநாயகி இவர்தான்…!

தக் லைஃப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி வெளியான தகவல்!

Show comments