Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியுடனான சந்திப்பை பெருமையுடன் எதிர்நோக்குகிறாராம் விஜய்

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2014 (18:20 IST)
பாஜக-வின் பிரதம வேட்பாளர் மோடியை இன்றிரவு கோவையில் சந்திக்கிறார் விஜய். இதுபற்றி ட்விட்டரில் எழுதியுள்ள அவர், இந்த சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை, அவருடனான சந்திப்பை பெருமையுடன் எதிர்நோக்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாலு பெரிய மனுஷனை தெ‌ரிஞ்சிருந்தால் பிழைச்சுக்கலாம் என்று சொல்வார்களில்லையா. அந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி. தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய மனிதர்கள் என்றால் சினிமா நட்சத்திரங்கள். சிறியவர்கள் என்றால் அந்த நட்சத்திரங்களின் ரசிகர்கள். 
 

ரஜினியை அவரது வீட்டில் சந்தித்த மோடி இன்று இரவு கோவையில் நடிகர் விஜய்யை சந்திக்கிறார். விஜய் அரசியல் தலைவர்களை தேடிச் சென்று சந்திப்பதும் பிறகு இந்த சந்திப்பிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்று கூறுவதும் முதல்முறை அல்ல.
இதற்கு முன் ராகுல்காந்தியை தேடிச் சென்று சந்தித்தார். காவலன் பிரச்சனை காரணமாக திமுக-வுக்கு போட்டியாக ஜெயலலிதாவை சென்று சந்தித்தார். தலைவா பிரச்சனைக்குப் பிறகு ஜெயலலிதாவையும் அரசியலுக்கு அப்பாற்பட்டு சந்திக்க முடியாமல் ஆகிவிட்டது. இருக்கிற ஒரே நபர் மோடி. 
 
விஜய் மோடியுடனான சந்திப்பை பெருமையுடன் எதிர்நோக்க காரணம் இருக்கதான் செய்கிறது.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

Show comments