Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்கப்பே தேவையில்லை

Webdunia
செவ்வாய், 13 மே 2014 (15:47 IST)
எப்படி ஒரு ஒற்றுமை பாருங்கள்? இனி மேக்கப் போடுவதில்லை என்ற முடிவுடன் இயக்குனர் விஜய்யை மணந்து சினிமாவுக்கு குட்பை சொல்லவிருக்கும் அமலா பாலின் கடைசிப் படத்தில் அவருக்கு மேக்கப் கிடையாதாம்.
அமலா பால், இயக்குனர் விஜய் காதல் விவகாரம் தெரிந்ததும் அமலா பாலை தங்களின் படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்தது ஒரு தெலுங்கு நிறுவனம். உண்மையில் அமலா பால் கொடுத்த கால்ஷீட்டை அந்த நிறுவனம்தான் பயன்படுத்தவில்லை. இப்போது அவர்கள் அழைத்தாலும் அமலா பால் அவர்களின் படத்தில் நடிப்பதாக இல்லை.
 

அதேநேரம் அமலா பாலின் கல்யாண அறிவிப்பு வந்தபிறகு மிலி என்ற மலையாளப் படத்தில் நடிக்கிற வாய்ப்பு அவரை தேடி வந்தது. படத்தை இயக்குகிறவர் ட்ராஃபிக் படத்தை எடுத்த ராஜேஷ் பிள்ளை. குறுகியகாலத் தயாரிப்பான மிலியில் அமலா பாலுக்கு மேக்கப் கிடையாது. அடுத்தவீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரம். கொஞ்சம் தாழ்வுமனப்பான்மையும் உண்டு.
இந்த கதாபாத்திரத்துக்கு நேரெதிரான குணம் என்னுடையது. என்னுடைய குணத்திலிருந்து கான்ட்ராஸ்டாக இருந்ததால் மிலியில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன் என்றார் அமலா பால். இதில் ஹீரோவாக நடிப்பது நிவின் பாலி.
 
ஏற்கனவே தொடங்கிவிட்ட மிலியின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியுடன் நிறைவுபெறுகிறது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments