தலைவா இன்னும் தமிழகத்தில் வெளியாகாத நிலையில் சேலத்தில் கட்டு கட்டாக தலைவா திருட்டு சிடி களை கைப்பற்றினார்கள். போலீஸ் நேரடியாக கைப்பற்றியதல்ல இந்த சிடி கள். விஜய் ரசிகர்கள் தகவலனுப்பி முற்றுகையிட்டு அதன் பிறகே போலீசார் வந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அதையெல்லாம் கணக்கில எடுக்க முடியுங்களா? இதோ விஜய், சேலம் சம்பவத்துக்கு வெளியிட்டுள்ள புது அறிக்கை:
திருட்டு சிடி தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே தமிழ்நாட்டில் இன்னும் தலைவா படம் வெளியிடப்படவில்லை. அதற்குள் யாராவது திருட்டு சிடி விற்றாலோ தயாரித்தாலோ அவர்களை பற்றி காவல் துறைக்கு தெரிவியுங்கள்.
நமது முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார்கள். என்.எல்.சி பிரச்சனை காவேரி நீர் பிரச்சனை அம்மா உணவகம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி லேப்டாப் உதவி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவர்களது வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும்.
எல்லாருக்கும் நல்லது செய்யும் முதல்வர் அவர்கள் தலைவா பிரச்சனையிலும் தலையிட்டு விரைவில் தமிழகமெங்கும் தலைவா வெளிவர ஆவண செய்வார்கள். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரும் பொறுமையாக காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பாவம்... தலைவா வெளியாவதற்குள் இன்னும் எத்தனை அறிக்கைகள் விட வேண்டி வருமோ.