Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியா... கூப்பிடுங்க ஸ்ரேயாவை

Webdunia
திங்கள், 28 ஜூலை 2014 (12:03 IST)
மனம் படத்தில் நாகார்ஜுனின் மனைவியாக நடித்த ஸ்ரேயா கோபாலா கோபாலா படத்தில் வெங்கடேஷுக்கு மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஸ்ரேயாவுக்கு த்ரிஷாவைப் போல் 31 வயதுதான் ஆகிறது. ஆனால் அம்மா வேடம் என்றால் மட்டுமே ஸ்ரேயாவின் ஞாபகம் முன்னணி ஹீரோக்களுக்கு வருகிறது.
 
2001 -ல் வெளியான இஷ்டம் தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார் ஸ்ரேயா. தமிழில் அறிமுகமானது 2003 -ல் வெளியான எனக்கு 20 உனக்கு 18. இப்போது ஸ்ரேயாவுக்கு வயது 31.
 
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று நான்கு மொழிகளில் பிஸியாக இருந்தவர் இப்போது படங்கள் இல்லாமல் ஓய்வில்தான் அதிக நேரம் இருக்கிறார். தமிழில் அவர் கைவசம் இருப்பது ராஜ ராஜனின் போர்வாள் என்ற ஒரே படம். தெலுங்கில் கோபாலா கோபாலா. 
 
வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கும் கோபாலா கோபாலா இந்தியில் வெளியான ஓ மை காட் படத்தின் தழுவல். அதில் பரேஷ் ராவல் நடித்த வேடத்தை வெங்கடேஷ் தெலுங்கில் செய்கிறார். அவரது மனைவியாக ஸ்ரேயா. இவர்களுக்கு கதைப்படி குழந்தைகள் இருக்கிறார்கள்.
 
கோபாலா கோபாலா படத்துக்கு முன்பு ஸ்ரேயா நடித்த தெலுங்குப் படம் நாகார்ஜுனின் மனம். இதிலும் அவரது மனைவியாகதான் நடித்தார். காதலியாக நடிப்பதற்கெல்லாம் இப்போது ஸ்ரேயாவை அழைப்பதில்லை. அதற்கான வயதை அவர் கடந்துவிட்டார் என நினைக்கிறார்களா ஹீரோக்கள்?
 
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments