Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் படத்தலைப்பில் தயாராகும் சுசீந்திரன் படம்

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (17:53 IST)
சுசீந்திரனை, எங்கள் காலத்தின் ராம.நாராயணன் என்று வர்ணித்தார் இயக்குனர் கரு.பழனியப்பன். ராம.நாராயணனைப் போல வருடத்துக்கு நாலு படம் பண்ணுவதால் இந்த அடைமொழி.
சுசீந்திரன் இயக்கியிருக்கும் ஜீவா இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் இரு படங்கள் அவர் கைவசம். ஒன்று விஷால், லட்சுமி மேனன் நடிக்கும் படம். இன்னொன்று வழக்கு எண் நாயகன் ஸ்ரீ நடிக்கும் படம்.
 
இதில் ஸ்ரீ நடிக்கும் படத்தை சுசீந்திரன் முதலில் இயக்குகிறார். இதில் ஸ்ரீ யுடன் சம்ஸ்க்ருதி செனாய் என்பவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். நல்லு ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. அக்டோபர் 6 -ஆம் தேதி படப்பிடிப்பு கோவையில் தொடங்குகிறது.
 
இந்தப் படத்துக்கு மணிரத்னம் தயாரிப்பில் வஸந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தின் பெயரை வைத்துள்ளார். 1997 -இல் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலமாகதான் சூர்யா சினிமாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments