Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பென்சில், நோட்டுடன் பிறந்தநாள் நற்பணியை தொடங்கிய விஜய் - படங்கள்

Webdunia
திங்கள், 9 ஜூன் 2014 (14:12 IST)
ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணிகள் செய்வதை விஜய்யும் அவரது ரசிகர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர். பள்ளிக் குழந்தைகளுக்கு பென்சில், நோட்டுப் புத்தகம் விஜய்யின் பிறந்த நாளுக்கு இலவசமாக வழங்கப்படும். தையல் எந்திரம், அயர்ன் பாக்ஸ், கம்ப்யூட்டர் என்று கடந்த சில வருடங்களில் நற்பணி மேம்பட்டுள்ளது.
சென்ற வருடம் கல்லூரி ஒன்றில் பிரமாண்டமாக மாநாடு போல் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டார் விஜய். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சாரமாக அந்த விழா இருக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில் ஆளும் கட்சியின் நெருக்கடியால் விழா நடத்த இடம் தர மறுத்தது கல்லூரி நிர்வாகம். பாதுகாப்பை காரணம் காட்டி விழா நடத்த போலீஸ் தரப்பும் அனுமதி மறுத்தது. தொடர் நெருக்கடியால் பிறந்தநாள் விழாவை ரத்து செய்யும்படி ஆனது. பிறகு படயூனிட்டுடன் சேர்ந்து எளிமையாக பிறந்தநாள் கொண்டாடினார் விஜய்.
 
இந்த வருடம் பிரமாண்ட விழா எதுவும் இதுவரை ஏற்பாடு செய்யவில்லை. அதேநேரம் நற்பணிகளை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பென்சில், நோட்டு புத்தகங்கள் தந்து தொடங்கி வைத்தார் விஜய். இந்த மாதம் முழுவதும் அவரது ரசிகர்கள் நடத்தயிருக்கும் நற்பணிகளை இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொடங்கி வைத்தார்.
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளும், விஜய்யின் மனைவி சங்கீதாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

‌விஜ‌ய் ‌பிற‌ந்தநா‌ள் ந‌ற்ப‌ணி!






‌விஜ‌ய் ‌பிற‌ந்தநா‌ள் ந‌‌ற்ப‌ணி!





எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்!

டாப்லெஸ் போஸ் கொடுத்த சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூர்!

போர்த் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தில் தனுஷ்!

விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஸர்பைஜான் கிளம்பிய அஜித்!

பார்க்கிங் படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா?

Show comments