Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை தாக்கும் காந்தப் புயல்

Webdunia
வெள்ளி, 23 மே 2014 (15:24 IST)
புதிய இயக்குனராக, புதிய கதை களத்தோடு ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ராம் பிரகாஷ் ராயப்பா. எங்கேயும் எப்போது பட இயக்குனர் சரவணனிடம் உதவி இயக்குனராகவும், பல விளம்பர படங்களை இயக்கிய அனுபவத்திலும், இவர் இயக்கியிருக்கும் படம் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும். 
பூமியை தாக்கும் ஒரு காந்தப் புயலால் தொலை தொடர்பு விஞ்ஞானம் எந்த அளவுக்கு பாதிப்படைகிறது. அதனால், மக்கள் எப்படியெல்லாம் பாதிப்படைகிறார்கள் என்பதோடு இதனால், ஒரு காதல் ஜோடிக்கு என்ன நேர்கிறது என்பதை சஸ்பென்ஸ், அதிரடி கலந்து இந்த கதையில் சொல்லியிருக்கிறேன். அத்தோடு, தாய் மகன் பாசத்தையும் இதில் நெகிழ்ச்சியுடன் காட்டியிருக்கிறேன் என்கிறார் இயக்குனர். 
 
வித்தியாசமான தலைப்பு கொண்ட இந்த படத்தில், அட்டகத்தி தினேஷ் நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், நகுல், புதுமுகம் ஐஸ்வர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ஏ.எல்.எஸ் ராக் சினிமாவுக்காக சந்திரன் தயாரித்திருக்கிறார்.

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

Show comments