Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவை, சிங்கம் காம்பினேஷனில் வெளிவரும் சரபம்

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2014 (18:17 IST)
தன் முயற்சியில் சற்றும் தளராத சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்டின் அடுத்த வெளியீடு சரபம். த்ரில்லர் ஜானரில் தமிழில் படங்கள் வருவது குறைந்த நிலையில் சி.வி.குமாரின் நிறுவனமே அந்த வெற்றிடத்தை நிரப்பியது. அவர்களின் தெகிடிக்குப் பிறகு க்ரைம் த்ரில்லர் வகைமையில் வருகிற படம்தான் சரபம்.
 
தெகிடி படத்தின் பிரஸ்மீட்டில் கேட்கப்பட்ட முதல் கேள்வி, தெகிடின்னா என்னா? சரபத்துக்கும் அப்படியே. சரபம்னா என்னா?
பாலையும், நீரையும் பிரிக்கும் அன்னப்பறவை, மழை நீரை மட்டும் அருந்தி வாழும் சக்கரவாகம் பறவை போல் இதுவும் புராணங்களில் வரும் ஒரு பறவை. இதன் தனித்தன்மை என்னவென்றால் உடம்பின் ஒரு பாதி பறவை என்றால் இன்னொரு பாகம் சிங்கம். இந்த பறவை சிங்கம் காம்பினேஷன்தான் சரபம் படத்தின் கதாபாத்திரங்கள். மென்மையும், ஆக்ரோஷமும் நிரம்பியவர்கள்.
 
எதிர்பாராமல் நடக்கும் ஒரு பிரச்சனை இந்த சரபங்களை ஒன்று சேர்க்கிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கப் போகிற கதை. 
 
நடிகர் அனு மோகனின் மகன் அருண் மோகன் படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு நடிகர் நவின் சந்திரா ஹீரோ, ஹீரோயின் சலோனி லுத்ரா. ஆடுகளம் நரேனுக்கு முக்கிய கதாபாத்திரம். 
 
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நம்பி சரபத்துக்கு செல்லலாம்.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments