Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை நாடாராக நடிக்கும் கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 19 ஜூன் 2014 (11:20 IST)
வட்டார வழக்கை பேசி நடிப்பதில் கமல்ஹாசன் வல்லவர். சென்னை தமிழ், கோவை தமிழ், ஈழத் தமிழ் என பல்வேறு வட்டார வழக்குகளில் பேசி நடித்திருக்கும் அவர் நெல்லை வட்டார நாடார்களின் பேச்சு மொழியை அடுத்தப் படத்தில் பயன்படுத்துகிறார்.
கமலின் விஸ்வரூபம் 2 இன்னும் வெளியாகாமல் உள்ளது. தற்போது இரு வேடங்களில் நடித்துவரும் உத்தம வில்லன் முடிந்து, அப்படம் வெளியான பிறகே விஸ்வரூபம் 2 வெளியாகும் என அறிவித்துள்ளனர். உத்தம வில்லனும் முடியும் நிலையில் உள்ளது.
 
அடுத்து மலையாள த்ரிஷ்யம் படத்தின் தமிழ் மேக்கில் கமல் நடிக்கிறார். மலையாளப் படத்தை இயக்கிய ஜீத்து ஜோ‌சப்பே தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார். ஜுலை 15 இந்த ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்குகிறது. த்ரிஷ்யத்தில் மோகன்லால் மலையாள கிறிஸ்தவராக நடித்திருந்தார். இதில் கமல் நெல்லை நாடாராக வருகிறார். அவரது மனைவியாக நடிக்க பலரை பரிசீலனை செய்தனர். அதிகமும் கௌதமி கமலின் மனைவியாக நடிக்கக்கூடும். 
 
த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக் ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது. வெங்கடேஷ், மீனா நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீப்ரியா இயக்கியுள்ளார்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments