Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பியார்... ஸ்ரீகாந்தின் எம்ஜிஆர் முடிவு

Webdunia
புதன், 9 ஜூலை 2014 (18:17 IST)
நம்பியார். ஸ்ரீகாந்த் தயாரித்து நடித்திருக்கும் படம். டல்லான மார்க்கெட்டை தூக்கி நிறுத்த ஸ்ரீகாந்தே தயாரிப்பாளராக களமிறங்கிய படம்.
ஆயக்கலைகளில் பாதியை கையாண்டும் சினிமாவில் ஸ்திரமான இடம் ஸ்ரீகாந்துக்கு வாய்க்கவில்லை. மார்க்கெட் டல்லாகும் போது நடிகர்கள் செய்யும் நெம்புகோல் வேலை.... அவர்களே தயாரிப்பாளராவது. அதைதான் ஸ்ரீகாந்தும் செய்துள்ளார்.
 
கோல்டன் ப்ரைடே ஃபிலிம்ஸ் என்ற பெயரில் நம்பியாரை ஸ்ரீகாந்தே தயாரித்துள்ளார். படத்தில் அவர் எம்ஜிஆராகவும், சந்தானம் நம்பியாராகவும் வருவதாக கேள்வி. சந்தானம் இருந்தால்தான் விநியோகஸ்தர்கள் படத்தை பார்க்கவே முன்வருவார்கள் என்பதால் அவரது பெயரையே - நம்பியார் - படத்தின் பெயராக்கிவிட்டார். டைட்டில் முதல் போஸ்டர்வரை ஸ்ரீகாந்துக்கு இணையாக சந்தானத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
 
காமெடியை மையமாக வைத்து தயாராகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன. இசை விஜய் ஆண்டனி. கணேஷா படத்தை இயக்கியுள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு.
 
நம்பியாரைதான் மலைபோல் நம்பிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
 

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments