Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயராம் பிளான் செய்துதான் பெயர் வைத்திருக்கிறார் - கமலின் கலகல பேச்சு

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (13:29 IST)
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஒரு பக்க கதை மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். காளிதாஸையும், படத்தையும் அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடந்தது. அறிமுகப்படுத்தியவர் கமல். கமலின் நீண்டநாள் நண்பர்களில் ஜெயராமும் ஒருவர் என்பதால் இந்த விசிட்.
 
விழாவில் பேசிய கமல், காளிதாஸ் என்ற பெயர் சினிமாவில் யாருக்கும் கிடையாது. ஜெயராம் பிளான் செய்துதான் இந்த பெயரை வைத்திருக்கிறார். குடும்பத்தையும் இப்படிதான் பிளான் செய்துள்ளார். அதனால்தான் அவருக்கு ஒரு பையன், ஒரு மகள் என்று விழாவை கலகலப்பூட்டினார்.
 
டி.என்.ஏ.யில் எனக்கு நம்பிக்கை கிடையாது. டி.என்.ஏ. எவ்வளவு பலமாக இருந்தாலும் அதை விரயம் செய்யும் ஊதாரித்தனமான பிள்ளைகள் இருந்தால் எதுவும் செய்ய முடியாது. நான் உழைப்பை மட்டுமே நம்புகிறேன் என்றார்.
 
சினிமாவில் பணிவை மட்டும் கற்றுக் கொள்ளாதீர்கள், அதன் கஷ்டங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏதாவது குழப்பமான இன்டஸ்ட்ரீஸ் பாலிடிக்ஸ் என்றால் என்னிடம் வந்து கேளுங்கள். அது ஜெயராமுக்கு தெரியாது. நான் ரொம்பப்பட்டிருக்கேன். அதனால் எனக்குத் தெரியும் என்று காளிதாஸுக்கு கமல் அறிவுரை வழங்கினார்.
 
ஒருபக்க கதையை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாலாஜி தரணீதரன் இயக்குகிறார். 
 

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

Show comments