Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ராஜாவின் தனி ஒருவனில் அரவிந்த் சாமி

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (14:06 IST)
ஜெயம் ராஜா தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து இயக்கி வரும் தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.
 
கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அரவிந்த் சாமி தனது படங்களை ரொம்பவும் கவனமாக தேர்வு செய்கிறார். மகேஷ் மஞ்சுரேகர் இந்தி, தமிழில் இயக்கும் படத்தில் நடிப்பவர் அடுத்து ஒப்புக் கொண்டது தனி ஒருவன். 
 
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்கள் முன்பு தொடங்கியது. ரயிலில் நடக்கும் காட்சிகளை அரங்கு அமைத்து எடுத்தனர். படத்தின் முதல் ஷெட்யூ‌லில் ஜெயம் ரவியும், நயன்தாராவும் நடித்தனர்.
 
தனி ஒருவனின் படப்பிடிப்பில் இன்று முதல் அரவிந்த் சாமி கலந்து கொள்கிறார். அஜீத் - கௌதம் படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிப்பதாக முன்பு சொல்லப்பட்டது. அதனை நான்சென்ஸ் என்று தனது ட்விட்டரில் மறுத்தவர் தனி ஒருவனில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
 
இந்தப் படத்தில் பிரபலமான ஹீரோவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிப்பதாக ஜெயம் ரவி கூறியிருந்தார். ஒருவேளை அந்த பிரபலமான வில்லன் அரவிந்த் சாமிதானோ? 
 
சந்தேகமாகதான் கேட்க வேண்டியுள்ளது. சாமி நான்சென்ஸ் என்றால் என்னாவது.

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

Show comments