Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் படமாகும் ரஜினியின் லிங்கா பாடல்

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (16:06 IST)
லிங்கா படப்பிடிப்பு கே.எஸ்.ரவிக்குமாரின் வழக்கமான படங்களைவிட மிக வேகமாக நடந்து வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மாலை 5 மணி வரை எடுப்பவர் மற்றவர்களை மேலும் நான்கைந்து மணி நேரம் ட்ரில் வாங்குகிறார்.
 
படத்தில் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமும், நிகழ்காலமும் வருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம் சம்பந்தமான காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்தனர். கடந்த 8ஆ‌ம் தேதியோடு ஹைதராபாத் ஷெட்யூல் நிறைவு பெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.
இந்த ஷெட்யூ‌லில் டாக்கி போர்ஷனுடன் பாடல் காட்சி ஒன்றையும் எடுக்கின்றனர். ரவிக்குமார் எதிர்பார்த்ததைவிட முன்னதாக பாடல் டியூனை தந்துள்ளார் ரஹ்மான். அந்த உற்சாகத்தில் சென்னை ஷெட்யூல்‌லில் பாடல் காட்சியை படமாக்குவது என்று முடிவு செய்துள்ளனர்.
 
லிங்காவில் ரஜினியுடன் சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா, சந்தானம் நடிக்கின்றனர். ரஹ்மான் இசை, ரத்னவேல் ஒளிப்பதிவு. ராக்லைன் வெங்கடேஷ் படத்தை தயாரிக்கிறார்.
 
இந்த வருடமே படம் திரைக்கு வருகிறது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments