Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுராஜ் படத்தில் அஞ்சலியுடன் நடிக்கும் கேதரின் தெரேஸா

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2014 (12:17 IST)
சுராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் அஞ்சலியுடன் கேதரின் தெரேஸாவும் நடிக்க உள்ளார்.
 
அலெக்ஸ் பாண்டியனின் படுதோல்விக்குப் பிறகு கொஞ்சம் கஷ்டப்பட்டே அடுத்தப்பட வாய்ப்பை சுராஜால் பெற முடிந்தது. ரிஸ்க் எடுக்க முன்வந்தது லட்சுமி மூவி மேக்கர்ஸ். 
ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஸ்டுடியோவில் சமீபத்தில் தொடங்கியது. சர்ச்சைகளின் நாயகியாக வலம்வந்த அஞ்சலிதான் படத்தின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவர். களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணத்தில் நடிக்காமல் சுராஜ் படத்தில் அஞ்சலியை நடிக்க அனுமதிப்பார்களா என்ற சந்தேகம் இருந்ததால் முதல்நாள் படப்பிடிப்பில் அஞ்சலி நடிப்பதைப் பார்க்க நிருபர்கள் குவிந்துவிட்டனர். படப்பிடிப்பு பிரேக்கின் போது அஞ்சலி பேட்டியும் தந்தார்.
நிற்க. அந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக கேதரின் தெரேஸாவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அட்டகத்தி இரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் கார்த்தியுடன் நடித்த இவர் தற்போது அதர்வாவுடன் கணிதன் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து சுராஜின் படம்.
 
அஞ்சலி, கேதரின் தெரேஸாவில் யார் முதல் ஹீரோயின், யார் இரண்டாவது ஹீரோயின்? கேதரின்  நடிக்கிறார் என்றதும் இந்த கேள்வியும் வலுவடைந்துள்ளது.
 
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments