Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரகக் கோளாறு - மீண்டும் மருத்துவமனையில் மனோரமா

Webdunia
வியாழன், 5 ஜூன் 2014 (11:19 IST)
இந்திய சினிமாவின் சாதனை நடிகையாக வலம் வருகிறவர் ஆச்சி மனோரமா. ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம் என பலவகைப்பட்ட நடிப்பை வழங்கியவர். கடந்த சில வருடங்களாக உடல்நலப் பிரச்சனை அவரை ஆட்டிப் படைக்கிறது.
 
இரண்டு வருடங்களுக்கு முன் கால் முட்டியில் ஏற்பட்ட வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சமீபத்தில் வீட்டில் தவறி விழுந்ததில் அவரது தலையில் பலத்த அடிபட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமானார். இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு நடுவில் ஒரு படத்துக்காக அவர் ஒரு பாடல் பாடியது குறிப்பிடத்தக்கது.
 
சென்ற மாதம் 26 -ம் தேதி மனோரமா தனது 77 -வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

Show comments