Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு தெரியாத பெருச்சாளி

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2014 (11:17 IST)
கமல் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கயிருக்கிறார். த்ரிஷ்யத்தை இயக்கிய ஜீத்து ஜோ‌சப்பே இந்த ரீமேக்கையும் இயக்க உள்ளார். உத்தம வில்லனுக்குப் பிறகு இந்தப் படம் தொடங்க உள்ளது.
அனைவருக்கும் தெரிந்த இந்த செய்தியுடன் கடந்த இரு தினங்களாக ஒரு வாலும் ஒட்ட வைக்கப்பட்டுள்ளது. மேலுமொரு மலையாளப் பட ரீமேக்கில் கமல் நடிக்கிறார் என்பதுதான் அந்த வால். அந்த மலையாளப் படம் எது?
 
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் மோகன்லால் நடிப்பில் பெருச்சாளி என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி வருகிறார். அரசியல் நையாண்டிப் படமான இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் கமல் நடிக்கயிருக்கிறார் என்பதுதான் சமீபத்திய தகவல்.
 
ஆனால் அதனை வைத்தியநாதனே மறுத்துள்ளார். பெருச்சாளி படத்தின் கதை கமலுக்கு தெரியும். ஆனால் அதில் அவர் நடிப்பது பற்றி பேச்சே இன்னும் எடுக்கவில்லை. நான் ஒரு கமல் ரசிகன். கமலை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் தன்யனாவேன் என்று கூறியுள்ளார்.
 
பெருச்சாளி ரீமேக் குறித்து கமலுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த வதந்தி ஒருவேளை உண்மையானால்... அதுவும் நல்லதுதான்.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

Show comments