Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு சினிமா கலைஞர்களும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்

Webdunia
புதன், 21 மே 2014 (18:12 IST)
’உலக அளவில் வளர்வதற்கு எல்லா திறமைகளும் இந்திய சினிமா கலைஞர்களுக்கு இருக்கிறது. அதற்கான சுதந்திரமும் இருக்கிறது. ஆனால், இந்திய அளவிலான இந்த வளர்ச்சியே போதும் என்கிற மன நிலை மாறவேண்டும். இந்திய சினிமா உலக அரங்கில் ஜொலிக்கவேண்டும் என ஒவ்வொரு சினிமா கலைஞர்களும் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்றார் நடிகர் கமலஹாசன். 
தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ’கேன்ஸ்’ திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல் இவ்வாரு கூறியிருந்தார். 
 
மேலும், ’இது போன்ற உலக புகழ் பெற்ற ’கேன்ஸ்’ விழாவில் இந்திய சினிமாவுக்கான முக்கிய பங்கு இருந்து கொண்டிருக்கும்படி பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டப் படவேண்டிய ஒன்றாகும். 
அதே போல இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் திறமைகளை உலகம் அறிந்து கொள்ள, இந்த ’கேன்ஸ்’ அரங்கம் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அதை இந்திய படைபாளிகள் நல்ல முறையில், சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். 

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

கல்கி பட ரிலீஸில் இருந்து பின்வாங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… காரணம் என்ன?

Show comments