Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ படத்துக்காக உடம்பை வருத்திக்கொண்ட விக்ரம் - வருகிறது வீடியோ விளம்பரம்

Webdunia
திங்கள், 14 ஜூலை 2014 (10:53 IST)
ஐ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. 150 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஐ படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர் பீட்டர் ஜாக்சனின் வீட்டா ஸ்டுடியோ படத்தில் வரும் விக்ரமின் தோற்றத்துக்கான (மேக்கப்) பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ரஹ்மான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
 

பிரமாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் மிகவும் மெலிந்த தோற்றத்திலும், கட்டுமஸ்தான தோற்றத்திலும் நடித்துள்ளார். உலக சினிமா சரித்திரத்தில் கதாபாத்திரத்துக்காக அதிகம் சிரமப்பட்டவர் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேல். த மெஷினிஸ்ட் படத்துக்காக 35 கிலோ எடையை குறைத்த அவர் எலும்பும் தோலுமான தோற்றத்தில் நடித்தார். கிறிஸ்டியன் போல் பேட்மேன் பிகின்ஸ், த டார்க் நைட், த டார்க் நைட் ரைசஸ் படங்களில் பேட் மேனாக நடித்தவர்.
அவருக்குப் பிறகு கதாபாத்திரத்துக்காக மெனெக்கெட்டவர் விக்ரம்தான் என்கின்றனர். அந்தளவுக்கு தனது உடலமைப்பையே மாற்றியிருக்கிறார். அதுவும் ஒரே படத்தில் உடம்பை இளைத்து மீண்டும் அஜானுபாகுவான தோற்றத்துக்கு மாறியிருப்பது சாதாரண விஷயமில்லை.
 
விக்ரம் எந்தெந்த தோற்றங்களில் ஐ படத்தில் நடிக்கிறார்... அந்த தோற்றங்களை அடைய அவர் எவ்வளவு தூரம் சிரமப்பட்டார்... அந்த தோற்ற மாற்றங்களுக்காக அவர் என்னென்ன உணவுகள் உட்கொண்டார்... எந்தெந்த உணவுகளை தவிர்த்தார்... அவர் செய்த உடற்பயிற்சிகள் என்ன... என்ற எல்லா விவரங்களும் அடங்கிய வீடியோ ஒன்றை விரைவில் வெளியிடுகின்றனர். படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க இந்த ஒரு வீடியோ போதும். 
 
இந்த வீடியோவைதான் கோடம்பாக்கம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
 

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

Show comments