Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனியா பெயரில் மோசடியா...?

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2014 (11:17 IST)
நான் சிகப்பு மனிதனில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார் இனியா. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவரும் மைக் பிடித்தார்.
படம் குறித்து அவர் சொன்னதில் சுவாரஸியம் இல்லை. அவரது ஓபன் ஸ்டேட்மெண்ட்தான் உறுத்தியது. என்ன அது?
 
நான் எனக்கு மேனேஜர் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. நானும் என்னுடைய அம்மாவும்தான் என்னுடைய கால்ஷீட்டை கவனித்துக் கொள்கிறோம். ஆனால் என்னுடைய மேனேஜர் என்று பொய் சொல்லி என்னுடைய கால்ஷீட்டை வாங்கித் தருவதாக மோசடி செய்கிறார்கள். அவர்கள் யார் என்பதை விரைவில் வெளிப்படுத்துவேன். இதுதான் இனியா பேசியதன் சாராம்சம்.
 
படம் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கேரளாவுக்கு பேக்கப்பாகயிருக்கும் இனியா பெயரில் மோசடியா? விசாரித்தத்தில் தெரிய வந்தது இனியாவின் வில்லங்கம். ஆரம்ப காலத்தில் சிலரை மேனேஜராக நியமித்தே தனது கால்ஷீட்டை பார்த்துக் கொண்டார் இனியா. அவர்களுக்கு இதுவரை இனியா கமிஷன் என்று பைசா தரவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் புலம்புகின்றனர். இப்போது இனியாவுக்கு மேனேஜர் இல்லை என்பது உண்மைதான். அதேநேரம் ஆரம்பத்தில் மேனேஜராக இருந்தவர்களுக்கு உரிய கமிஷன் தந்தாரா என எதிர்கேள்வி கிளம்புகிறது.
 
என்ன பதில் சொல்லப் போறீங்க மேடம்?
 
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments