Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்பளயில் சதீஷ்தான் தம்பியாம்

Webdunia
சனி, 26 ஜூலை 2014 (11:11 IST)
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ஆம்பளயில் அவரது தம்பியாக நடிக்க உள்ளார் நகைச்சுவை நடிகர் சதீஷ்.
 
அடுத்தவர்களை புண்படுத்தும் வசனம் பேசாமலே நகைச்சுவை செய்யத் தெரிந்த காமெடி நடிகர் சதீஷ். மெரினா, எதிர்நீச்சல், மான் கராத்தே படங்களில் தனது திறமையை நிரூபித்த அவருக்கு படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. விஜய்யின் கத்தியிலும் சதீஷ் நடித்துள்ளார்.
 
சுந்தர். சியின் படம் என்றால் நகைச்சுவை நடிகர்களுக்கு பெரிய ஸ்கோப் இருக்கும். வடிவேலு, சந்தானம், மிர்ச்சி சிவா எல்லாம் தங்களின் உச்சத்தை எட்டியது அவருடைய படத்தில்தான். அப்படியொரு சந்தர்ப்பம் சதீஷுக்கும் கிடைத்துள்ளது. ஆம்பளயில் அவருக்கு முக்கியமான வேடம்.
 
பொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோவின் நண்பனாகதான் வருவார்கள். ஆம்பளயில் விஷாலின் தம்பியாக நடிக்க உள்ளாராம் சதீஷ். ஹன்சிகா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் சதீஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments