Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் கவர்ச்சியில் கலக்கும் ஸ்ருதிஹாசன் - படங்கள்

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2014 (11:32 IST)
எல்லைதாண்டிய பயங்கர கவர்ச்சியில் ஆளை அசரடிக்கிறார் ஸ்ருதிஹாசன். அதிலும் இந்த மாதம் வெளியாகவிருக்கும் ரேஸ் குர்ரம் படத்தில் அவர் காட்டியிருக்கும் கவர்ச்சியில் ஆந்திராவே (ஜெnள்ளில்) வழுக்குகிறது.
ஆடை குறைப்பு விஷயத்தில் ஸ்ருதி ஆரம்பம் முதலே கட்டுப்பாடு வைத்துக் கொண்டதில்லை. இந்தியில் வெளியான டி டே படத்தில் கராச்சி பாலியல் தொழிலாளியாக நடித்தார். 

அதில் அவரது போஸ் இந்தியா முழுக்க கவனத்தை ஈர்த்தது. அதேபோல் தெலுங்கில் அல்லு அர்ஜுனின் மடியில் அமர்ந்து அவர் தந்த போஸ் சர்ச்சைக்குள்ளாகி ஹைதராபாத்தில் அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. ஏப்ரல் 11 ரேஸ் குர்ரம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் பாடல் காட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியை கட்டவிழ்த்துள்ளார் ஸ்ருதி. ஒரு பாடலுக்கு ஆடும் கவர்ச்சி நடிகைகளே ஸ்ருதியின் ஆடை தள்ளுபடியிலும், தாராள கவர்ச்சியிலும் அதிர்ந்து போயிருப்பார்கள். 

அந்தளவு எல்லை தாண்டிய பயங்கர கவர்ச்சி. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி அஸ்திரத்தை பலமாகவே எறிந்து வருகிறார்.
அவரின் கவர்ச்சிக்காகவே ரேஸ் குர்ரம் படத்துக்கு தனி எதிர்பார்ப்பு நிலவுகிறது.ரேஸ் குர்ரம் என்றால் ரேஸ் குதிரை என்று அர்த்தம். சரியான பெயர்தான்.
 
(ராம் சரண் தேஜாவுடன் நடித்த யவடு படத்தின் ஸ்டில்கள்தான் இங்கிருப்பவை)

மேலும் படங்கள்:





 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!