Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக. 21 ஃபகத் பாசில், நஸ்ரியா திருமணம்

ஆக. 21 ஃபகத் பாசில், நஸ்ரியா திருமணம்
, வெள்ளி, 25 ஜூலை 2014 (11:16 IST)
நடிகர் ஃபகத் பாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் வரும் ஆகஸ்ட் 21 கேரளாவில் நடக்கிறது.
நஸ்ரியா சினிமாவில் நுழைந்து இப்போதுதான் முன்னணி இடத்துக்கு வந்துள்ளார். தமிழில் குறுகிய காலத்தில் திருமணம் என்னும் நிக்காஹ், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும் என பல படங்களில் நடித்தார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க உள்ள மலையாள உஸ்தாத் ஹோட்டலின் தமிழ் ரீமேக்கான தலப்பாகட்டியிலும் நஸ்ரியாவையே முதலில் ஒப்பந்தம் செய்திருந்தனர்.
 
இந்நிலையில் திடீரென ஃபகத் பாசிலின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார் நஸ்ரியா. இருவருமே முஸ்லீம் என்பதால் இரு வீட்டிலும் எதிர்ப்பில்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
webdunia
கணவர், கணவரின் குடும்பம் மற்றும் தன்னுடைய குடும்பம் அனுமதித்தால் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் நஸ்ரியா. இந்த மூன்று பேரில் கணவர் மட்டுமே நஸ்ரியா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கணவரின் குடும்பத்துக்கும், நஸ்ரியாவின் குடும்பத்தினருக்கும் திருமணத்துக்குப் பின் அவர் சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை. அதனால் நஸ்ரியா தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா என்பது கேள்விக்குறிதான்.
 
ஆகஸ்ட் 21 இவர்களின் திருமணம் முஸ்லீம் முறைப்படி கேரளாவில் நடக்கிறது. 
 
நஸ்ரியாவுக்கு இப்போதுதான் பத்தொன்பது வயதாகிறது. அவரைவிட பதினோரு வயது மூத்தவர் ஃபகத் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil