Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதர்வாவும் இப்போது சிக்ஸ்பேக்

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (12:10 IST)
நடிகர்களின் சினிமா மீதான ஈடுபாட்டிற்கும், ஆரோக்கியமான உடற்கட்டுக்கும் அடையாளமாக மாறியிருக்கிறது சிக்ஸ்பேக். சூர்யாவின் சிக்ஸ்பேக்கை தொடர்ந்து விக்ரம், விஷால், தனுஷ், அரவிந்த் ஆகாஷ் போன்ற பலர் சிக்ஸ்பேக் வைத்தனர். சிம்புகூட சிக்ஸ்பேக்குக்கு முயற்சி செய்தார். இவர்களில் சமீபத்திய வரவு, அதர்வா.
அதர்வா இரும்பு குதிரை படத்தில் ரேஸ் வீரராக வருகிறார். அதையடுத்து நடிக்கிற ஈட்டி படத்தில் தடகள வீரர். இந்தப் படத்துக்காக விடியற்காலையிலேயே எழுந்து சென்னை பாரீஸ் கார்னரில் உள்ள மைதானத்தில் தினமும் உடற்பயிற்சி செய்து தடகள வீரருக்குரிய தோற்றத்தைப் பெற்றுள்ளார். அவருக்கு பயிற்சி தந்தவர், நிஜ தடகள வீரரைப் போல் மாறியிருக்கிறார் அதர்வா என்று பாராட்டியுள்ளார். இந்தப் படத்துக்கு கச்சிதமான உடற்கட்டு தேவை என்பதற்காக சிக்ஸ்பேக் வைத்துள்ளார்.
ஈட்டி படத்துக்காக வைத்த சிக்ஸ்பேக் என்றாலும் இரும்புகுதிரையிலும் பெரும்பாலான காட்சிகளில் சிக்ஸ்பேக்கில் தோன்றுகிறார்.
 
ஈட்டியை ரவி அரசு என்பவர் இயக்கி வருகிறார்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments