Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அங்கே இங்கே லிங்கா ... அனுஷ்கா

Webdunia
சனி, 24 மே 2014 (11:47 IST)
தலைப்பைப் படிக்கையில் ஏதோ மாதிரி  இருக்குமே? இன்றைக்கு அனுஷ்காவின் நிலை இப்படிதான் உள்ளது. கொஞ்ச நாள் ஹைதராபாத்தில் லிங்கா, கொஞ்ச நாள் சென்னையில் அஜீத் படம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்.
அனுஷ்கா தற்போது மூன்று முக்கிய படங்களில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகாபலி, அஜீத் நடிப்பில் கௌதம் இயக்கும் படம், ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் எடுத்துவரும் லிங்கா. மூன்றும் முக்கிய படங்கள். ஒரு படத்துக்காக இன்னொரு படத்தின் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்யவும் முடியாது.
 
அஜீத் படத்தில் சில தினங்கள் நடித்தவர் அதன் பிறகு லிங்கா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அனுஷ்கா இல்லாத காட்சிகளாக எடுத்து வந்த கௌதம் நாளை முதல் மீண்டும் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கிறார். ஆம், லிங்கா படப்பிடிப்பிலிருந்து தற்காலிகமாக தன்னை விடுத்துக் கொண்டு கௌதம் படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளார் அனுஷ்கா.
 
அஜீத்தை வைத்து பிஸியாக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும் கௌதம் அடுத்த மாதம் சிம்புவை வைத்து இயக்கியிருக்கும் படத்தின் வேலைகளில் சில தினங்கள் கவனம் செலுத்தயிருக்கிறார். அஜீத் படம் முடியும் முன் சிம்பு படத்தை வெளியிட வேண்டும் என்பது அவரது திட்டம்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments