Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்ஷய் குமார் ஜோ‌டியாகும் தாப்ஸி

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (12:40 IST)
இந்திப் படத்தில் நடிக்க வேண்டும், பாலிவுட்டை கலக்க வேண்டும் என்பதே நடிக்க வரும் பாதி நடிகைகளின் விருப்பம். வடக்கே இருந்து வந்த தாப்ஸிக்கு இந்த ஆசை சற்று அதிகம் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. 
ரன்னிங் ஷாதி டாட் காம் படத்தில் ஏற்கனவே நடித்தவர் விரைவில் நீரஜ் பாண்டே இயக்கும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கயிருப்பவர் அக்ஷய் குமார்.
 

ஏ வெட்னெஸ்டே, ஸ்பெஷல் 26 படங்களின் மூலம் ரசிகர்கள், விமர்சகர்கள் இரு தரப்பின் பாராட்டையும் பெற்றவர் நீரஜ் பாண்டே. இவரின் மூன்றாவது படத்துக்கு லொகேஷன் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. படப்பிடிப்பு தொடங்கும் முன்பே 2015 ஜனவரி 23 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 
நீரஜ் பாண்டேயின் முந்தையப் படமான ஸ்பெஷல் 26 லும் அக்ஷய் குமார்தான் ஹீரோ. ஹீரோயினாக நடித்தது காஜல் அகர்வால். சென்றமுறை காஜலுக்கு அடித்த அதிர்ஷ்டம் இப்போது தாப்ஸிக்கு.
 
தொடர்ந்து இந்தியில் நடித்தாலும், தமிழ், தெலுங்கை புறக்கணிக்க மாட்டேன் என்று தாப்ஸி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி.

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி.. தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்..!

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா-பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

Show comments