Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான சுவையில் பாதுஷா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மைதா - அரை கிலோ
சர்க்கரை - அரை கிலோ
உப்பு - தேவையான அளவு
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - மூன்று டீஸ்பூன்
டால்டா - 100 கிராம்
தேங்காய் - 1
பால் - ஒரு டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
 
மைதா மாவினை சலித்து எடுத்து ஒரு அகன்ற தட்டில் கொட்டி, அதில் தேவையான அளவு உப்பு, சமையல் சோடா, டால்டா, மூன்று டீஸ்பூன் நெய், பால், ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துக் கொ‌ள்ளவு‌ம்.
 
பிறகு அதை பெரிய எலுமிச்சைப்பழ அளவில் உருண்டையாக பிடித்து அதனை தட்டி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். பிறகு, ஜீரா செய்ய ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், சர்க்கரையைப் போட்டு பாகு பதம் வருவதற்கு முன்பே இறக்கி ஆறவைத்து‌க்  கொ‌ள்ளவு‌ம். பொ‌ரி‌த்த பாதுஷா‌க்களை ஜீரா‌வி‌ல் போட்டு ஊறவைக்கவும்.
 
தே‌ங்கா‌யை மெ‌ல்‌லியதாகத் துரு‌வி அ‌தி‌ல் கேச‌ரி‌ப் பவுடரை‌க் கல‌ந்து பாதுஷா‌வி‌ன் ‌மீது தூவி அலங்கரித்தால் சூப்பரான பாதுஷா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குரு பிரச்சனை அதிகம் வருமா?

ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! வராமல் தடுப்பது எப்படி?

குக்கரில் சாதம் சமைத்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!

உணவில் வெண்ணெய் சேர்த்தால் உயிருக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments