Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவையான முறையில் அச்சு முறுக்கு செய்ய !!

Achu Murukku
, திங்கள், 17 அக்டோபர் 2022 (15:46 IST)
தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
மைதா மாவு - 1/4 கப்
சக்கரை - 1/4 கப்
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - சிறிதளவு
வெண்ணிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி



செய்முறை:

1  கப் துருவிய தேங்காய் பூவை, 1/2 கப் வெது வெது நீர் சேர்த்து, அரைத்து, ஒரு பெரிய வடிகட்டியில் ஊற்றி, பிழிந்து தேங்காய்ப்  பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சக்கரை, தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும். எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தோசை மாவு போல கெட்டியாக  கரைக்கவும். மாவு அச்சில் நினைத்து எடுத்தால், சொட்டாமல் இருந்தால் நல்லது.

எண்ணெய் காயவைத்து, அதில் முறுக்கு அச்சை அதில் வைத்து சூடாக்கவும். கரைத்த மாவில் அச்சை 3/4 பாகம் மட்டும் நனைத்து, சூடான எண்ணெய்யில் விட்டு, லேசாக ஆட்டவும். சற்று நொடிகளில் முறுக்கு அச்சிலிருந்து பிரியும். சத்தம் அடங்கும் வரை பொரித்து பொன்னிறமானவுடன் எண்ணெய்யிலிருந்து வடித்து எடுக்கவும். தீ எப்பொழுதும் மிதமாக இருக்க வேண்டும்.

குறிப்பு:

அச்சை விட்டு முறுக்கு சில சமயம் பிரியாது. குறிப்பாக புதிது என்றால். அப்பொழுது, ஒரு போர்க் அல்லது குச்சி வைத்து எடுத்துவிடலாம். ஒரே சமயத்தில் 3 வரை பொரிக்கலாம்.

ஒவ்வொரு முறையும் அச்சை சூடு படுத்திக்கொள்ளவும். தேவைக்கு அதிகமாக தேங்காய் பாலோ, சக்கரையோ சேர்க்கவேண்டாம்.

Edited by Sasikala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்ப காலத்தில் அழகு சாதன பொருட்களை தவிர்க்க வேண்டுமா...?