கோதுமை ஸ்வீட் அப்பம் செய்ய...

Webdunia
தேவையான பொருள்கள்:
 
கோதுமை மாவு - 200 கிராம் 
அரிசி மாவு - 100 கிராம் 
அச்சு வெல்லம் - 150 கிராம் 
சோடா உப்பு - 1 தேக்கரண்டி 
பொரிப்பதற்கு எண்ணெய் - 200 கிராம்
வாழைப்பழம் - 1

 
செய்முறை:
 
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, வாழைப்பழம் போன்ற பொருட்களை ஒன்றாக கலந்து  வைக்கவும். அச்சு வெல்லத்தை 200 கிராம் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
 
வடிகட்டிய பாகை கலந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு  தடவைக்கு நான்கு அப்பங்கள் வீதம் ஊற்றவும்.
 
ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். நன்கு வேகும் வரை பொரித்து சிவந்தவுடன் எடுக்கவும். மீதமுள்ள எல்லா மாவையும்  இதே முறையில் சுட்டு எடுக்கவும். எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான கோதுமை  ஸ்வீட் அப்பம் தயார். மாலை நேர சிற்றுண்டி மிகவும் சிறந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments