ஆரோக்கியம் தரும் உளுத்தங்கஞ்சி செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
கருப்பட்டி(பனை வெல்லம்) - 1/2 கிலோ
ஏலக்காய் - 10
தேங்காய் - 1
சுக்கு - 1/2 அங்குல நீளம்
செய்முறை: 
 
உளுத்தம்பருப்பை வாசம் வரும் வரை லேசாக வறுக்கவும். ஆறிய பின் அரை மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை துருவி முதல் பால்  கால் லிட்டர் அளவும், இரண்டாம் பால் கால் லிட்டர் அளவும் எடுக்கவும். உளுத்தம்பருப்பை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
கருப்பட்டியை நசுக்கி அரை லிட்டர் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும். சுக்கையும், ஏலக்காயையும் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும். கிரைண்டர் கழுவிய நீருடன் 1/2 லிட்டர் வருமாறு சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். கருப்பட்டியை கரைத்த நீரை வடிகட்டி மாவுடன்  சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து திக்காக வரும் போது ஒரு சிட்டிகை உப்பும், இரண்டாம் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.
 
5 நிமிடம் கழித்து முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி கொதி வராமல் சூடு ஏறியதும் இறக்கவும். அடுப்பில் இருக்கும் பொது அடிக்கடி கிளறி விடவேண்டும். இல்லையேல் அடி பிடித்துவிடும். பெண்களுக்கு இடுப்புக்கும், ஆண்களுக்கு நெஞ்சுக்கும் மிகவும் நல்லது. கர்ப்பிணிப்பெண்களுக்கு  அடிக்கடி செய்து கொடுத்தால் பிரசவம் சுலபமாக இருக்கும்.
 
குறிப்பு: உளுத்தம் பருப்பை தனியாக நன்கு குழைய வேகவைத்தும் உபயோகப்படுத்தலாம். அல்லது அரைத்தும் உபயோகப்படுத்தலாம். உளுத்தங்கஞ்சி செய்ய தோல் உளுந்தையும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்!. இத மட்டும் செஞ்சி பாருங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments