எளிதான முறையில் சுவையான தேங்காய் பிஸ்கட் செய்ய !!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (15:40 IST)
தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய்  - 80 கிராம்
சர்க்கரை - 40 கிராம்
வறுத்த தேங்காய் துருவல் - 25 கிராம்
வெனிலா சுகர் பவுடர் - அரை தேக்கரண்டி
பாதாம் பருப்பு தூள் - 15 கிராம்
உப்பு - சிட்டிகை



செய்முறை:

முதலில் உருக்கிய வெண்ணெய்யுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன் சீனி, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பின் பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சமதளத்தில் வைத்து சப்பாத்தி போல் வார்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.

பின் 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும். சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments