சுவை மிகுந்த பீட்ரூட் அல்வா செய்ய !!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (12:57 IST)
தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 4
பால் - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - சிறிது
உலர் திராட்சை - சிறிது
பாதாம் - சிறிது
கண்டென்ஸ்டு மில்க் - தேவையான அளவு



செய்முறை:

முதலில் பீட்ரூட்டை கழுவி, தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, பாதாம் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வறுத்து, பின் அதனை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்கி, பின் அதில் பால் சேர்த்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு, பின் தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கலவை கெட்டியாகும் வரை நன்கு பிரட்டி இறக்கி, அதில் முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை தூவி பரிமாறினால், பீட்ரூட் அல்வா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments