சுவையான பாதாம் பூரி செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்: 1 கப் மைதா மாவு, 2 கப் அரிசி மாவு, 1/4 கப் நெய், உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசையுங்கள் (சப்பாத்தி மாவு பதம்). அதை பத்து  நிமிடத்திற்க்கு வைக்கவும். பாகு தயார் செய்ய: சர்க்கரை 1 கப். தேவையான அளவு தண்ணீர்.

ஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும். அதனுடன் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும். இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும்.
 
பிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்து எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி) செய்து கொள்ளவும். இப்பொழுது கடாயில் எண்ணெய்யை சூடேற்றி அதில் ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். அந்த சுடச்சுட பூரியை சர்க்கரை பாகில்  நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்.
 
1/2 கப் துருவிய தேங்காயை அதில் மேல் தூவி பரிமாறலாம். சுவையான பாதாம் பூரி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணத்தக்காளி கீரையின் மகத்துவங்கள்: வயிற்றுப் புண் முதல் கருப்பை ஆரோக்கியம் வரை தீர்வு தரும் இயற்கை மருந்து!

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு.. எது சிறந்தது?

தலைசீவும் சீப்பை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்..!

கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வந்தால் என்ன பிரச்சனை?

காதில் அழுக்கு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

அடுத்த கட்டுரையில்
Show comments