சுவையான முறையில் அரிசி பாயாசம் செய்ய !!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பாஸ்மதி அரிசி - 1/4 கப் 
பால் - 4 கப் 
நெய் - 1/4 கப் 
சீனி - 3/4 கப் 
முந்திரிப்பருப்பு - 1/4 கப் 
காய்ந்த  திராட்சை - 10
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 

செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராடசை இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும்.

பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி  கொதிக்கவிடவும்.
 
கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து இடையிடையே கிளறி விடவும். அரிசி நன்கு வெந்து பால் பாதியாக குறைந்ததும்  சீனியை சேர்த்து  நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

இறுதியில் நெய், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம்  கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான அரிசி பாயாசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments