Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதா மில்க் பர்பி

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மைதா - 1 கப்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 3 1/2 கப்
நெய் - கால் டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்


 
 
செய்முறை:
 
பாலை சுண்டக் காய்ச்சி கோவா பதத்தில் எடுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், (லேசாக புகை வரும் போது) மைதாவை தூவி நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
 
இதனுடன் கோவாவை கட்டியில்லாமல் உதிர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து,  முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, இரட்டை கம்பி பாகு பதம் வந்தவுடன் அதில் மைதா கலவை, ஏலக்காய்த்தூள் தூவி இரண்டு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.
 
இப்போது பாத்திரத்தை கீழே இறக்கி சிறிது நேரம் கழித்து பார்த்தால்… ஏடு போல் படிந்து இருக்கும்.  அந்த சமயம் அக்கலவையை மேலும் கொஞ்சம் கிளறி நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரவலாக்கவும். பிறகு துண்டுகள் போடவும்.
 
மைதா மில்க் பர்பி ரெடி.

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

Show comments