Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத சுவையில் பால் கொழுக்கட்டை செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 150 கிராம்
தேங்காய் பால் - 350 மில்லி
சர்க்கரை - 200 கிராம்
பால் மற்றும் தண்ணீர் - 375 மில்லி
ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை: 
 
வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்துக் கொள்ளவும். வெந்நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நெய் ஊற்றி, சிறிது சிறிதாக அரிசி மாவு சேர்த்து மிருதுவாக  பிசைந்து, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின், சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 
 
உருட்டிய அரிசி மாவு உருண்டைகளை பால் மற்றும் மெல்லிய இரண்டாம் தேங்காய் பாலில் வேக வைக்கவும். மாவு வெந்து, பாலின் மேல் கொழுக்கட்டைகள் மிதக்க ஆரம்பித்தவுடன், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.

சர்க்கரை கரைந்தவுடன், முதல் தேங்காய் பால் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

தொடர்புடைய செய்திகள்

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments