Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை பாயாசம் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
உடைத்த கோதுமை - 1 கப்
பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை - தேவையான அளவு
வெல்லம் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
பால் - 1/2 கப்
தண்ணீர் - 3 கப்
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பாப்பி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
 
கோதுமை பாயாசம் செய்ய ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமையை தண்ணீரில் ஒரு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி தேவையான அளவு தண்ணிர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
 
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். அதே கடாயில் வெல்லத்தை ஒரு கப் தண்ணீர்  ஊற்றி கரைத்து பாகு செய்து வடித்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்க வேண்டும். அரைத்த  விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும். பிறகு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவைத்து ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
 
அடுத்ததாக, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். கடைசியாக அதில் பால் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில்  வைத்து வேகவைத்து இறக்கினால் சுவையான கோதுமை பாயாசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments