Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த பைனாபிள் கேசரி செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பைனாப்பிள் துண்டுகள் - கால் கப்
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 1/2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
 
கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் மீதமிருக்கும் நெய் அல்லது எண்ணெய் விட்டு  ரவையை வறுக்கவும்.
 
வேறொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதனுடன் கலர் சேர்த்துக் கொள்ளவும். ரவை நன்கு வெந்து பொன்னிறமாக வரும்போது கலர் கலந்து வைத்துள்ள, வெந்நீரை ஊற்றி கட்டி விழாமல் கிளறவும். 
 
பின்னர் சர்க்கரையை சேர்க்கவும். அது இளகியதும் பைனாபிள் துண்டுகள் சேர்க்கவும். அனைத்தும் ஒரு செர நன்கு கிளறி சுருண்டு வரும்போது ஏலக்காய்த் தூள், முந்திரி, திராட்சை, எசன்ஸ் சேர்க்கவும். சுவையான பைனாபிள் கேசரி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments