Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பனங்கிழங்கு தேங்காய்ப்பால் பாயாசம் செய்வது எப்படி?

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (10:41 IST)
மார்கழி, தை மாதம் வந்தாலே பனங்கிழங்கு சீசன் வந்துவிடும். பனங்கிழங்கு பல நல்ல சத்துக்களை கொண்டது. பனங்கிழங்கை கொண்டு சுவையான பாயாசம் செய்வது எப்படி என பார்ப்போம்.



பனங்கிழங்கு தேங்காய்ப்பால் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

பனங்கிழங்கு – 3, தேங்காய்ப்பால் ஒரு கிண்ணம், பனை வெல்லம், ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை, நெய்,

முதலில் வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பனங்கிழங்கை வெந்நீரில் போட்டு நன்றாக வேகவிட்டு அவித்துக் கொள்ள வேண்டும். பனங்கிழங்கின் மேல்பகுதியில் நார்கள் அதிகம் இருக்கும். அதனால் மேல் தோலை நார் வராத படி நீக்கி, பின்னர் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெட்டிய பனங்கிழங்கை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பனை வெல்லத்தை வாணலியில் இட்டு கொதிக்கவிட்டு கரைசலாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்னர் அரைத்த பனங்கிழங்கை வாணலியில் இட்டு நெய் சேர்த்து அடி பிடிக்காமல் 3 நிமிடங்கள் வரை கிளர வேண்டும். பின்னர் அதனுடன் தயார் செய்து வைத்த பனை வெல்லக்கரைசலை சேர்க்க வேண்டும். நல்ல கொதியில் அதை இறக்கி தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டும். பின்னர் ஏலக்காய், வறுத்த முந்திரி, திராட்சையை தூவி மெதுவாக கிளறிவிட்டால் சூப்பரான சூடான சுவையான பனங்கிழங்கு தேங்காய் பால் பாயாசம் தயார்.

பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் சரியாகும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் ஏற்பட என்னென்ன காரணங்கள்?

ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள்

நீங்கள் சாப்பிடும் உணவு மட்டுமல்ல, அதை சமைக்கும் முறைகூட 'சர்க்கரை அளவை உயர்த்தலாம்'

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

மழை காலத்தில் வரும் நோய்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments