Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பலாப்பழம் - 20
தேங்காய் பால் - 2 கப்
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 6
முந்திரி - தேவையான அளவு
பிஸ்தா - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை:
 
பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு. பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேகவைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து  வைத்துக்கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி ஒரு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி, நன்கு கொதித்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரணடி நெய் சேர்த்து  இறக்கவும். சுவை மிகுந்த பலாப்பழ பாயாசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments