Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த சர்க்கரை பொங்கல் செய்ய தெரியுமா...?

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (12:39 IST)
தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பாகு வெல்லம் - 1 கப்
பாசி பருப்பு  - கால் கப்
நெய் - 100 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு
முந்திரி பருப்பு - தேவையான அளவு
உலர் திராட்சை - தேவையான அளவு
பச்சை கற்பூரம் - சிறதளவு



செய்முறை:

பச்சரிசி, பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து 10 நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் ஊறவைத்த பச்சரிசி மற்றும் பாசி பருப்பை குக்கரில் சேர்த்து குழைவாக வேக வைத்து கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் 1 கப் பாகு வெல்லத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வேகவைத்து பச்சரிசியுடன் சேர்த்துக் கொள்ளவும். வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் வறுத்த முந்திரி திராட்சையை சர்க்கரை பொங்கலுடன் சேர்த்து கொள்ளவும். சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து கொஞ்சம் நெய்  சேர்த்து இறக்கி பரிமாறினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments