ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம்

Webdunia
புதன், 6 மே 2009 (14:21 IST)
கோ‌யி‌ல்க‌ளி‌ல் அ‌பிஷேக‌த்‌தி‌ற்காக வழ‌ங்க‌ப்படு‌ம் ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம் செ‌ய்வது எ‌ப்படி எ‌ன்பதை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.

தேவையான பொரு‌ட்க‌ள்

வாழை‌ப்பழ‌ம்
ஆ‌ப்‌பி‌ள்
மாதுளை
கொ‌ய்யா பழ‌ம்
பே‌ரி‌ட்ச‌ம் பழ‌ம்
ப‌ன்‌னீ‌ர் ‌திரா‌ட்சை
நா‌ட்டு ச‌ர்‌க்கரை
தே‌ன்
ஏல‌க்கா‌ய்
நெ‌ய்
டை‌ய்ம‌ண்‌ட் க‌ற்க‌ண்டு

செ‌ய்யு‌ம் முறை

வாழை‌ப்பழ‌த்தை தோ‌ல் ‌உ‌ரி‌த்து ‌சி‌று ‌சிறு து‌ண்டுகளாக நறு‌க்‌கி ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பே‌ரி‌ட்ச‌ம் பழ‌த்தையு‌ம் ‌சிறு ‌சிறு து‌ண்டுகளாக நறு‌க்‌கி‌ வாழை‌ப்பழ ம‌சிய‌லி‌ல் போடவு‌ம்.

நா‌ட்டு ச‌ர்‌‌க்கரை அ‌ல்லது பொடி‌த் வெ‌ல்ல‌ம் போ‌ட்டு ‌கிளறவு‌ம். அ‌த்துட‌ன் மாதுளை‌ப் பழ‌ம், நறு‌க்‌கிய கொ‌ய்யா பழ‌ம், ப‌ன்‌னீ‌ர் ‌திரா‌ட்சை பழ‌ம், டையம‌ண்‌ட் க‌ற்க‌ண்டு சே‌ர்‌த்து ந‌ன்கு ‌கிளறவு‌ம்.

அ‌தி‌ல், தே‌ன், ஏல‌க்கா‌ய் பொடி, நெ‌ய் சே‌ர்‌த்து ந‌ன்கு ‌கிள‌றி‌விடவு‌ம். எ‌வ்வளவு‌க்கு எ‌வ்வளவு ‌கிள‌றி ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம் குழை‌கிறதோ அ‌ந்த அள‌வி‌ற்கு சுவை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

உ‌‌ங்களு‌க்கு‌த் தேவையான அ‌ல்லது அ‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌கிடை‌க்கு‌ம் பழ‌ங்களை ப‌ஞ்சா‌மி‌ர்த‌த்‌தி‌ல் சே‌ர்‌க்கலா‌ம் அ‌ல்லது குறை‌க்கலா‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

Show comments