சோளமாவு கொழுக்கட்டை

Webdunia
புதன், 17 மார்ச் 2010 (15:02 IST)
தேவையான பொருட்கள்:

சோளமாவு - 2 க‌ப்
சர்க்கரை - 100 கிராம்
துரு‌விய தேங்காய் - 1 கப்
நெய் - 1 தே‌க்கர‌ண்டி
ஏலக்காய் தூ‌ள் - ‌சி‌றிது

செய்முறை:

இ‌ட்‌லி கு‌ண்டா‌னி‌ல் சுத்தமான துணியில் சோளமாவை‌க் கொட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடிகனமான பா‌த்‌திர‌த்‌தி‌ல் 1 டம்ளர் தண்ணீரை சூடாக்கி, சர்க்கரை, பொடியாக நறுக்கிய தேங்காய், ஏலப்பொடி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளவும்.

மா‌வி‌ல் இ‌ந்த த‌ண்‌ணீரை ஊ‌‌ற்‌றி‌க் கிளறி நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவின இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

எ‌‌ளிய முறை‌யி‌ல் சோளமாவு கொழுக்கட்டை தயார்!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ல் 1 குழந்தைக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறதா? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

Show comments