Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிஞர் கண்ணதாசனின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம்

சுரேஷ் வெங்கடாசலம்
வியாழன், 28 ஜனவரி 2016 (14:06 IST)
கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரி கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க ஆரம்பித்தார்.


 

 
அரங்கத்தில் இருந்தவர்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பினர். அவர் கவிதையின் ஒவ்வொரு வரியை வாசிக்கும்போதும் பலத்த கைதட்டல் எழுந்தது.
 
வாசித்து முடிந்ததும் கைத்தட்டல் அடங்க நீண்ட நேரம் ஆனது.
 
கைத்தட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் கூறினார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.
 
உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கவிதை எடுத்துக் கொண்டு நேற்று என்னிடம் வந்து காண்பித்தார்.
 
அதுமிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.
 
என் கவிதையை அவர் வாசிக்கும்போது, எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த கர ஒலியுடன் கூடிய வரவேற்பு.
 
ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது''. என்று கூறினார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments