Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் போட்டியால் கொலை செய்ய முயற்சியா? கே,ஜி.எஃப் நாயகன் யாஷ் விளக்கம்

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (11:01 IST)
கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என  ஐந்து மொழிகளில் வெளியான கே.ஜி.எஃப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தின்  நாயகன் யாஷின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக செய்திகள் பரவியது. இதனால் கன்னட திரையுலகில் அதிர்ச்சி அடைந்தனர்.


 
கடந்த மார்ச் 7-ம் தேதி கர்நாடக போலீசார் , பாரத் என்ற ரவுடி உள்பட 4 ரவுடிகளை கைது செய்தனர்.அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூடிய விரைவில் ஒரு கன்னட நடிகரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்தனர்.
 
இந்நிலையில் ரவுடி கும்பல் யாஷ் அல்லது அர்ஜுன் தேவை கொல்ல திட்டமிட்டிருக்கலாம் என தகவல் பரவியது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  "எனக்கு இதுவரை எந்தக் கொலை மிரட்டலும் வரவில்லை. நான் பாதுகாப்பாக உள்ளேன். எனக்கு திரையுலகில் எதிரிகள் யாரும் இல்லை. இங்கே இருப்பவர்கள் தொழில போட்டியால் கொலை செய்யும் அளவுக்கு கீழ்த்தனமானவர்கள் இல்லை.  எனவே எனது ரசிகர்கள் பிற நடிகர்களை குறை சொல்வதை உடனே  நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments