என்னுடைய பலம், பலவீனம் - தமன்னா பேட்டி

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2016 (11:58 IST)
சிறுத்தை, பையா படங்களுக்குப் பிறகு மீண்டும் தோழாவில் கார்த்தியுடன் இணைந்திருக்கிறார் தமன்னா. தோழா பாடல்கள் வெளியீட்டு விழாவில், என்னுடைய லக்கி ஸ்டார் சூர்யா என்று தமன்னா சொன்னது சினிமா அரசியலின் அற்புதமான நிகழ்வு. சில வருடங்களுக்கு முன்பு, தமன்னா தமிழில் நடிக்க முடியாமல் போனதற்கு சிவகுமார் குடும்பமே காரணம் என்ற வதந்தியை இதன் மூலம் பொய்யாக்கியவர், ஒரேநேரத்தில் இரு மாஸ் ஹீரோக்களின் குட் புக்கிலும் இடம் பிடித்துள்ளார். தோழா படம் வெளியாகவிருப்பதையொட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமன்னா.


 

தமன்னாவின் பலம், பலவீனம் என்ன?

நான் என்ன நினைக்கிறேனோ அதை செய்து முடிக்கணும் என்பதில் உறுதியா இருப்பேன். அதுதான் என்னோட பலம். பலவீனம்னா, நடந்து முடிஞ்ச விஷயங்களை எப்போதும் நினைச்சுகிட்டே இருப்பேன். அது என்னோட பலவீனம்.

நடிகையானதற்காக எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?

இல்லை. நடிகையானதற்காக நான் சந்தோஷப்படுறேன். நடிகையானதால்தான் இத்தனை பேரால் கவனிக்கப்படுறேன், ரசிக்கப்படுறேன்.

இதுவரை நடித்த படங்கள் திருப்தியை தந்திருக்கின்றனவா? இனி எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை?

நான் இதுவரை நடித்த அனைத்துப் படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கணும், சிறந்த நடிகைன்னுக பெயர் வாங்கணும், இதுதான் என்னோட லட்சியம்.

தர்மதுரையில் டப்பிங் பேசியிருக்கிறீர்களே...?

நடிக்க வந்த புதிதில் எனக்கு தமிழும், தெரியாது, தெலுங்கும் தெரியாது. மற்றவர்கள் பேச நான் நடிப்பேன். ரொம்ப சிரமமாக இருநதது. அப்புறம் நானே இரண்டு மொழிகளையும் படிச்சு பேச ஆரம்பித்தேன். இப்போ தமிழில் சொந்தமா டப்பிங் பேசுற அளவுக்கு தமிழ் தெரியும்.

நடிக்க வந்தபோது இருந்ததைப் போலவே எடை அதிகரிக்காமல் ஸ்லிம்மாக இருக்கிறீர்களே?

நான் தினமும் உடற்பயிற்சி செய்வேன். அது காரணமாக இருக்கலாம்.

அழகு என்பதற்கு உங்களின் வரையறை என்ன?

அழகு வெளியே இருப்பதில்லை. நாம் பார்க்கிற பார்வையில் தெரிவது அழகு கிடையாது. அழகு ஒவ்வொருவரின் மனதில் இருக்கிறது. நல்ல மனதுடன் வாழ்பவர்கள்தான் அழகானவர்கள்.

நீங்கள் அடிக்கடி காணும் எனவு எது?

நான் கனவு காண்பது இல்லை. நடிகையாக இருக்கும் இந்த வாழ்க்கையே ஒரு கனவு போலத்தான்.

உங்களுக்குப் பிடித்த நடிகை, நடிகர்கள்...?

ஜோதிகாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அவரது தீவிர ரசிகை. ஹிர்த்திக் ரோஷன், கரீனா கபூரையும் பிடிக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் படத்திற்காக சாதியை கைவிடும் மாரி செல்வராஜ்!.. செம அப்டேட்..

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஈரான் உச்ச தலைவர்.. பாகிஸ்தானில் முக்கிய பேச்சுவார்த்தை..!

புஷ்பா 2 சாதனையை முறியடித்த துரந்தர் 2!.. வசூல் சும்மா கொட்டுது!..

எனக்கு தெரிஞ்சது திரிஷா வீடு மட்டும்தான்!. ராணாவின் பழைய வீடியோ வைரல்!...

நீங்களே ஒரு தாலி வரம் கேடு வந்தேன் பாடலைதானே சுட்டுள்ளீர்கள்? கானா தினேசை கேட்கும் நெட்டீசன்கள்

Show comments