நான் ஹீரோவான நீதான் மச்சான் டைரக்ஷன் - சந்தானம்

Webdunia
செவ்வாய், 6 மே 2014 (10:51 IST)
எந்தப் படத்தின் பிரஸ்மீட்டுக்கும் வராத சந்தானம் தான் ஹீரோவாக நடித்திருக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார்.

இனி ஹீரோவா இல்லை காமெடியனா என்ற குழப்பம் அவருக்கு இருக்கிறது. அதேநேரம் எதுவாக இருந்தாலும் தொடர் வெற்றிதான் இலக்கு என்ற  தாராளமாக இருக்கிறது சந்தானத்திடம். வெடிகுண்டையே கேள்வியாக்கி வீசினாலும் ம்ஹும்... சந்தானத்திடம் சின்ன பதற்றமில்லை.
 
அறை எண் 305 -ல் கடவுள் படத்துக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாகியிருக்கீங்க...?
 
அறை எண் 305 -ல் கடவுள் படத்துல நடிச்சிருந்தாலும் அந்தப் படத்துல மூணு ஹீரோஸ். பிரகாஷ்ராஜ் சார், கஞ்சா கருப்பு, நான். மூணு பேருமே லீட் ரோல். அதனால அதை ஹீரோன்னு சொல்ல முடியாது, லீட் ரோல்னுதான் சொல்ல முடியும். ஒரு ஹீரோவா எனக்கு முதல் படம்னா அது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்தான்.
 

படம் எப்படி வந்திருக்கு?
 
ஆடியோ, ட்ரெய்லர் எல்லாமே நல்லா ரீச் ஆகியிருக்கு. படமும் நல்லா வந்திருக்கு.
இயக்குனரா ஸ்ரீநாத்தை தேர்வு செய்ய என்ன காரணம்? 
 
ஸ்ரீநாத் என்னோட நண்பன். படம் டைரக்ட் பண்றதுல அவனுக்கு நிறைய இன்ட்ரஸ்ட். படத்தில் நடிக்கிறப்போ டைரக்ஷன் பற்றிதான் பேசிகிட்டிருப்பான். அப்போ நான் சொல்வேன், பண்ணலாம் மச்சான் ஒரு படம்னு. ஆனா, அப்போ நாங்க பண்ணுனா பிசினஸ் ஆகுமா, நாமயெல்லாம் படம் பண்ணுனா விற்க முடியுமானு ஒரு சிச்சுவேஷன். நமக்குன்னு பிசினஸ் வரும்போது பண்ணுவோம் அப்படின்னேன். நான் ஹீரோவா பர்ஸ்ட் பண்ணுனா நீதான் மச்சான் டைக்ஷன்னு அப்போ சொன்னேன். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துல நான் ஹீரோ கிடையாது, சீனுதான் ஹீரோ. அதனால மச்சான் இதுல வேண்டாம். நான் ஹீரோவா பண்ணும்போது பண்ணலாம்னு சொன்னேன். அதுக்கப்புறம்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் பண்ண முடிவானது.
காமெடியனா நடித்ததற்கும் இந்தப் படத்துக்கும் என்ன வித்தியாசம்?
 
இதுல வொர்க் பண்ணுன எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்தான். நான் எந்தப் படத்துக்குப் போனாலும் வொர்க் பண்ணுவேன், காமெடி பண்ணுவேன், சரியா தலைகூட வார மாட்டேன். குடுக்கிற சட்டையை போடுவேன், பேண்டை போடுவேன்.

என் வேலையை மட்டும் செய்வேன். என்ன பன்ச் பேசுறோம் ஜனங்க எதை ரசிப்பாங்க அதை மட்டும்தான் பார்ப்பேன். ஆனா இதுல ஹேர்ஸ்டைல், காஸ்ட்யூம், டயலாக், பன்சஸ், லைட்டிங்னு பிரேம் பை பிரேம் இன்வாலங்வாகியிருக்கேன். என்னோட டீமும் என்னை ஹீரோவா காண்பிக்க என்னென்ன செய்யணுமோ அதை செய்திருக்காங்க. அதுல ஏறி நான் ஜாலியா சவாரி போயிருக்கேன். நிச்சயமா இதுவொரு டீம் வொர்க்தான்.
 

முதல் டூயட் அனுபவம் எப்படி இருந்தது?
 
டூயட்டுங்கிறது இந்த சப்ஜெக்ட்ல இல்ல. ஆனா ஒரு ட்ரீம் சாங் இருக்கு. அதை பண்ணியிருக்கோம். ஆனா அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்திச்சி. ஒரு புது எக்ஸ்பீரியன்ஸ்தான். 
கவுண்டமணி, வடிவேலு, சந்தானம்... மூணுபேர்ல யார் பெஸ்ட் காமெடியன்?
 
நீங்கதான் சொல்லணும், நான் எப்படி சொல்றது?
 
சினிமாவில் யாராக ஆகணும் என்பது உங்களின் விருப்பம்?
 
நான் பர்ஸ்ட் டிவி ஷோவுல இருந்து காமெடியனா வந்தேன். அப்புறம் ஒரு புரொடக்ஷன் ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் ஹீரோவா ஒரு வாய்ப்பு கிடைச்சு ஹீரோவா பண்ணியிருக்கேன்.

அதுக்கப்புறமும் நான் இப்போ காமெடியனா பண்ணிகிட்டிருக்கேன். டைரக்ஷன்கூட பண்ணுவேன். சினிமாங்கிறது என்னோட வேலை. அந்த வேலையை திருப்தியா பண்ணணும்னு ஆசைப்படுறேன். மத்தபடி இதுதான் அதுதான்னு எதுலயும் நான் பிக்ஸ் ஆகலை. 
நீங்க நடிச்ச எந்தப் படத்தின் பிரஸ்மீட்டுக்கும் இதுவரை நீங்க வந்ததில்லையே...?
 
நான் எல்லா பிரஸ்மீட்டுக்கும் வந்து பேசினா ஒரே விஷயத்தைதான் பேசிகிட்டிருக்கணும். கேள்வி கேட்கிற உங்களுக்கும் போரடிச்சிடும், பதில் சொல்ற எனக்கும் போரடிச்சிடும், இதை நியூஸா படிக்கிற ஜனங்களுக்கும் போரடிச்சிடும், இதேதாம்பா எப்பவும் சொல்றான்னு. ஆனா இந்தப் படத்துல நான் ஹீரோவா பண்றதால பேசுறதுக்கு ஒரு மெட்டீரியல் இருக்குது. நீங்க எழுதினாலும் படிக்கிறது ஒரு இன்ட்ரஸ்டிங் இருக்கும். 
 

 
இனி தொடர்ந்து ஹீரோதானா?
 
எப்படின்னு தெரியலை. இப்போ நிறைய பேர் கதை சொல்றாங்க, நானும் கேட்டுகிட்டு இருக்கேன். இந்தப் படம் ரிலீஸுக்கு அப்புறம்தான் எப்படின்னு தெரியும்.

இது இல்லாம காமெடியனா பண்ணப் போற படங்களும் கமிட் பண்ணி வச்சிருக்கேன். ஸோ, டைமை பொறுத்துதான் இருக்கு. 
 
ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் பெரிய ஆள்கள் யாரும் எனக்கு தேவையில்லைன்னு கான்ட்ரவர்ஸியை கிளப்பினீர்களே...?
 
ஆடியோ ரிலீஸ்ல நான் கான்ட்ரவர்ஸியா எதுவும் பேசலை. பெரிய ஆள்கள் இருக்காங்க. அவங்க எவ்வளவு பெரிய ஆள்களா இருந்தாலும், நாம பூஜைக்கு கூப்பிடுறோம்னு வச்சுக்குங்க. வர்றாங்க வந்து தேங்காய் உடைக்கிறாங்க. இந்தப் படம் நல்லா வரணும்னு நினைக்கிறாங்களோ இல்லயோ. ஆனா, இந்தப் படம் ஓடவே கூடாதுன்னு உடைக்கிறாங்கன்னா... ஒரு பெரிய ஆள்வந்து உடைச்சாலும் அது வேஸ்ட்தான்.

அதே நேரம் நமக்குத் தெரிஞ்ச டீக்கடை வச்சிருக்கிற ஒரு ஆளாயிருந்தாலும் அவரை கூப்பிட்டா அவர் கண் கலங்கி கடவுளே இந்தப் படம் ஓடணும்னு உடைச்சார்னா அது பவர் வேற. ஸோ, ஒரு சின்ன ஆளா இருந்தாலும் நான் நல்லாயிருக்கணும்னு நினைக்கிற ஆள் கூட இருந்தார்னா நான் கண்டிப்பா ஜெயிச்சிடுவேன். எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும், ஐயையோ இவனா அப்படின்னு நினைக்கிறவங்க கூட இருந்தா ஜெயிக்க முடியாது. ஸோ, எனக்கு அந்த மாதிரி ஆள்கள் தேவையில்லை. இந்த மாதிரி நான் ஜெயிக்கணும், நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க மட்டும் என்கூட இருந்தா போதும் அப்படீங்கிற ஸ்பீச்சுதான் நான் கொடுத்தேன். 
 
படம் எப்போ ரிலீஸ்?
 
மே 16 பிளான் பண்ணியிருக்கோம்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தீபிகா படுகோன் 2வது முறையாக கர்ப்பம்.. அட்லி படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

டிரம்ப் சொன்னது எல்லாமே பொய்.. 1 மணி நேரத்திற்கு 7 பொய் சொல்பவர் டிரம்ப்.. ஈரான் குற்றச்சாட்டு..!

ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்'.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவு தானா? முழு ரிப்போர்ட் இதோ!

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

Show comments