கடவுளிடம் என்ன கேட்பேன்? - ப்ரியங்கா சோப்ரா பேட்டி

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2015 (14:51 IST)
ப்ரியங்கா சோப்ராவின் புகழ் உலக அளவில் பரவ இருக்கிறது. அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ப்ரியங்கா நடித்து வருகிறார். அந்தத் தொடரில் அவரது கதாபாத்திரமே மையம். சென்ற வாரம் வெளியான பாஜிராவ் மஸ்தானியும் அவருக்கு பாராட்டுகளை வாங்கித் தந்துள்ளது.


 
 
வடஇந்திய ஊடகத்துக்கு ப்ரியங்கா சோப்ரா அளித்த பேட்டியின் தமிழ் வடிவம் இங்கே உங்களுக்காக.
 
நீங்கள் அமெரிக்காவில் படித்ததாக சொல்லப்படுவது உண்மையா?
 
உண்மைதான். என்னுடைய சித்தி யுஎஸ்ஸில் இருந்தார். என்னுடைய 12 -வது வயதில் அங்கு சென்று, அங்கேயே படித்தேன்.
 
இயக்குனர் பர்ஹான் அக்தர் உங்களை கடுமையான வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறதே?
 
அவர் நல்ல இயக்குனர். ஆனால் எந்த நேரம் எப்படி நடந்து கொள்வார் என்று தெரியாது. திடீரென்று கத்துவார். டென்ஷனாக திட்டுவார். அதனால் அவருடைய மனநிலை அறிந்து நடந்துகொள்வேன்.
 
'தில் தடக்னே தோ' படப்பிடிப்பில் அவர் உங்களை திட்டவில்லை. எப்படி அதனை சாத்தியமாக்கினீர்கள்?
 
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, ‘இப்படி எல்லார் முன்னாடியும் கத்துகிற வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள். அப்புறம் நான் அழ ஆரம்பித்து விடுவேன். அதற்கு மேல் எனக்கு நடிப்பு வராது. நான் அழணுமா, நடிக்கணுமா என்று நீங்களே தீர்மானம் செய்து கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டேன். அதனால் அவரும் வழிக்கு வந்துவிட்டார்.
 
அமெரிக்க இயக்குனர்கள் எப்படி?
 
எல்லா நாட்டிலும் மனிதர்கள் ஒரே மாதிரிதான். நான் கூடுமானவரை மற்றவர்களை புரிந்துகொண்டு அதற்கு தக்கபடி நடந்து கொள்வேன். என்னால் யாரும் டென்ஷன் ஆகாத அளவுக்கு பார்த்துக்கொள்வேன்.
 
உங்கள் தன்னம்பிக்கைக்கு என்ன காரணம்?
 
என் தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தவர். அதனால் நாங்கள் குடும்பத்தோடு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்றலாகிக் கொண்டே இருப்போம். இப்படி பல ஊர்களுக்கு சென்று பலதரப்பட்ட மக்களிடம் பழகியதால் நான் மக்கள்தொடர்பில் சிறந்து விளங்கினேன். அதுவே என்னிடம் தன்னம்பிக்கையை வளர்த்துவிட்டது.
 
உங்கள் பிரார்த்தனை என்ன?
 
என் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற நேரமும், சக்தியும் வேண்டும் என்று பிரார்த்திப்பேன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

பாலிவுட் திரையில் தாவூத் இப்ராஹிம்: 'துரந்தர் 2' படத்தின் யதார்த்த சித்தரிப்பு

Show comments