Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு தூண்டுதலாக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி - ஹன்சிகா பேட்டி

எனக்கு தூண்டுதலாக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி - ஹன்சிகா பேட்டி

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (20:02 IST)
போக்கிரி ராஜா வெளியாவதை முன்னிட்டு படம் குறித்தும், தனது சமூக சேவை குறித்தும் மீடியாவின் முன் மனம் திறந்தார் ஹன்சிகா.
 
போக்கிரி ராஜா படத்தில் உங்க கதாபாத்திரம் குறித்து சொல்லுங்க...?
 
போக்கிரி ராஜா படத்தில் சமூக சேவையில் ஈடுபடும் பெண்ணாக வருகிறேன். இந்த படத்தில் நகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று உழைக்கும் ஒரு பெண் வேடத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 

 
நிஜத்திலும் சமூக சேவையில் ஈடுகிற உங்களுக்கு தூண்டுதலாக இருப்பவர் யார்?
 
பொதுச்சேவையில் எனக்கு ஈடுபாடு அதிகம். இந்த விஷயத்தில் எனக்கு தூண்டுதலாக இருப்பவர், பிரதமர் நரேந்திர மோடி. அவரது தூய்மை இந்தியா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தது.
 
ஜீவாவுடன் முதல்முறையாக நடித்திருக்கிறீர்கள்...?
 
ஜீவா என்னுடைய நண்பர். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
 
சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் நடிக்க போகிறீர்களாமே?
 
அப்படி ஒரு தகவல் பரவியுள்ளது. ஆனால், அந்தப் படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. 
 
அரண்மனை 2 போன்ற பேய் படங்களில் இனி நடிப்பீர்களா?
 
அரண்மனை 2 படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், வாய்ப்பு வந்தால் அதுபோன்ற கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்.
 
இன்னும் அஜித், விக்ரம் போன்றவர்களுடன் நடிக்கவில்லையே...?
 
வாய்ப்பு வரவில்லை நடிக்கவில்லை. வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்.
 

 
காதல்...?
 
நான் எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது சக மாணவனுடன் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தற்போது யாரையும் காதலிக்கவில்லை. நடிப்பு தொழிலை மட்டுமே காதலிக்கிறேன்.
 
பிறந்தநாளில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கிறீர்களே?
 
ஆமாம். என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். இதுவரை 31 குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன். அவர்களுக்காக ஒரு இல்லம் கட்ட முயற்சித்து வருகிறேன். 
 
நீங்க நடத்தயிருக்கும் ஓவியக் கண்காட்சி பற்றி சொல்லுங்கள்?
 
எனக்கு ஓவியங்கள் வரைய தெரியும். படப்பிடிப்புகள் இல்லாமல் ஓய்வில் இருக்கும்போது நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளேன். அந்த ஓவியங்களை விரைவில் சென்னையில் கண்காட்சியாக வைத்து ஏலம் விட திட்டமிட்டுள்ளேன். அதில் வசூலாகும் பணத்தை ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக செலவிடுவேன்.

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

Show comments