பார்த்திபன் வர்ற சீனெல்லாம் பொறி பறக்கும் - பேரரசு, பார்த்திபன் பேட்டி

Webdunia
வெள்ளி, 28 நவம்பர் 2014 (09:55 IST)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திகார் படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார் இயக்குனர் பேரரசு. திகார் என்றதும் நினைவுக்கு வரும் கிரண் பேடியை வைத்து பாடல்களை வெளியிட்டது பெயருக்கேற்ற பொருத்தம். அடக்கமான மியாவ் குரலில் பேசினாலும் பேரரசின் பேச்சுக்கு கைத்தட்டல் விழுந்து கொண்டேயிருந்தது. இனி அவரது பேச்சு....
 
பாடல்கள் வெளியீட்டு விழாவில் எதற்கு கிரண் பேடி...?
 
திகார் அப்படின்னாலே எல்லோருக்கும் ஜெயில்தான் ஞாபகத்துக்கு வரும். திகார் ஆடியோ விழாவுக்கு யாரை கூப்பிடலாம்னு யோசித்தோம். பலர் பல பேரை சொன்னாங்க. ஆனா, எல்லோருக்கும் தெரிஞ்சது திகார்னா கிரண் பேடி மேடம்தான். சில ஊர்களை சொல்லும் போது சில தலைவர்கள் ஞாபகத்துக்கு வருவாங்க. ஈரோடுன்னா தந்தை பெரியார் ஞாபகத்துக்கு வர்ற மாதிரி. அதேபோல இந்தியா முழுக்க திகார்னு சொன்னா ஞாபகத்துக்கு வர்றவங்க டாக்டர் கிரண் பேடி மேடம்தான்.
 
பார்த்திபன் எப்படி படத்தில் இணைந்து கொண்டார்?
 
அவர் இப்போதும் ஹீரோதான். அவரை ஒரு சப்போர்ட்டிங் கேரக்டர்ல நடிக்க கேட்கிறதுன்னு தயக்கம். சரி, கேட்டுப் பார்ப்போம்னு போனோம். சொன்னதும் வருவார்னு நினைச்சோம். ஆனா, கதையை சொல்லுங்கன்னார். சரின்னு அவர் போர்ஷன் மட்டும் சொன்னேன். இந்த ஏமாத்துற கதை நிறைய தெரியும் எனக்கு, முழுக் கதையையும் சொல்லுங்கன்னார். ஒருநாள் டைம் கேட்டுட்டு மறுநாள் போய் முழுக் கதையையும் சொன்னேன். கேட்டுகிட்டு அப்புறமா ஒத்துகிட்டார். ஏன்னா அவர் உண்மையான கலைஞன். பைசாவுக்கு ஒத்துக்க மாட்டார். 
படம் எப்படி வந்திருக்கு?
 
படம் பார்த்த எல்லோரும், என்ன சார் பார்த்திபன் வர்ற சீனெல்லாம் பொறி பறக்குது அப்படின்னாங்க. அவர் வர்ற ஒவ்வொரு சீனும் அப்படி பவர்ஃபுல்லா இருக்கு. 
 
அவரிடம் நீங்க வியந்த குணம்?
 
நைட் ஷுட்டிங் இருந்திச்சின்னா அதை முடிச்சிட்டு காலையில கரெக்டா வந்திடுவார். மத்த ஹீரோக்கள் நைட்ல நடிச்சா காலையில வர மாட்டாங்க. காலையில் நடிச்சா நைட்ல வர மாட்டாங்க. இவர் நைட் இரண்டு மணிவரை நடிச்சிட்டு காலையில எட்டு மணிக்கு மறுபடியும் வந்திடுவார்.
 
பேரரசுக்குப் பிறகு பார்த்திபன் பேரரசு குறித்து பேசினார். 
 
பேரரசு பற்றி சொல்லுங்க...?
 
பேரரசு பேசும்போது நைட் இரண்டு மணிக்கு போய்ட்டு காலையில எட்டு மணிக்கு வரச் சொன்னாலும் வந்திடுவார்னு சொன்னார். நான் வருவேன். ஆனா அவர் அங்கேயேதான் இருப்பார். வீட்டுக்கே போகலை. இந்த மாதிரி ஒரு டைரக்டர் கிடைக்கிறது ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். 
 
ஷுட்டிங் அனுபவம் எப்படி இருந்தது?
 
நான் அவர்கூட வொர்க் பண்ற முதல் படம் இது. ஷுட்டிங்கின் போது அவர் பேப்பர் பேனா வச்சுகிட்டதை நான் பார்த்ததேயில்லை. நமக்கு வேலையே வச்சுக்க மாட்டார். அவரே பன்ச் டயலாக் சொல்வார். ஆக்ஷன்கூட அவரே செய்து காமிச்சிடுவார். இந்தப் படத்துல அவர்கூட வொர்க் பண்ணுனது சுவையான விஷயம். 
 
பேரரசு பெரிய இடைவெளிக்குப் பிறகு படம் செய்திருப்பதை பற்றி...?
 
இயற்கை மரணம்னா மூச்சு விடுறதை நிறுத்தும்போது நிகழும். ஆனா, இயக்குனர்களின் மரணம்னா அவங்க ஒதுக்கப்படும்போது மட்டும்தான் ஏற்படும். பேரரசால வளர்ந்த பெரிய நடிகர்கள் இருக்கலாம். அவங்க எல்லாம் கொஞ்சம் கவனமா அவர்கூட மீண்டும் படம் பண்றதுக்கான முயற்சியை எடுக்கணும்கிறது என்னோட அன்பான வேண்டுகோள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிரம்ப் சொன்னது எல்லாமே பொய்.. 1 மணி நேரத்திற்கு 7 பொய் சொல்பவர் டிரம்ப்.. ஈரான் குற்றச்சாட்டு..!

ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்'.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவு தானா? முழு ரிப்போர்ட் இதோ!

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Show comments